சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தற்போது கிளம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஜிஎஸ்டி சாலை மற்றும் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் நுழைவு வாயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலம் நகரும் மின்தரை வசதியுடன் உருவாக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயணிகள் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமம் இருக்காது. மேலும் இந்த ஸ்கைவாக் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.