டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு மது விற்பவர்கள், வாங்குபவர்கள்,  உபயோகப்படுத்துபவர்களுக்கு காவல்துறையினர் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்ய வேண்டும் என பரிந்துரையும் அளித்திருக்கிறார்கள். அதேபோல 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபான விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.