தமிழக பாஜக கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்ணாமலை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, திமுக அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார். அதோடு அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், திமுகவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி தமிழகத்தின் எதிர்க்கட்சி பாஜக தான் என்று அண்ணாமலை கூறி வருகிறார். அண்ணாமலை இப்படி தொடர்ந்து அதிரடி செயல்களில் ஈடுபட்டு வந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள்  சந்திப்பின் போது நீ எந்த சேனல் உனக்கு கேள்வி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பத்திரிகையாளர்கள் சங்கமும் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. அண்ணாமலை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் சர்ச்சையான வார்த்தைகளை பேசி சிக்கலை ஏற்படுத்துவது பாஜகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால் அவரின் வாய்க்கு கடிவாளம் போட வேண்டும் என்று பாஜவை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாககயுள்ளது. மேலும் அண்ணாமலையின் மீது டெல்லி பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்குமா அல்லது எடுக்காதா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.