சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்ற நிலையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தடுக்கும் விதமாக தற்போது புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் 20,000 முதல் 22 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக பேருந்தில் பயணிக்க முடியும். இந்த பேருந்து சேவைகள் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக எந்தெந்த வழித்தடங்களில் பேருந்து செய்திகள் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி,

1. கிண்டி-பிராட்வே (வழி மந்தைவெளி) 21X

2. கிண்டி-பிராட்வே‌ 21G

3. கண்ணகி நகர்- வேளச்சேரி 5G

4. மாதவரம்-பிராட்வே 38 A

5. எண்ணூர்- வள்ளலார் நகர் 56A

6. தி நகர்-அம்பத்தூர் தொழிற்பேட்டை 147

7.சிஎம்பிடி-குமணஞ்சாவடி 153

8. ராமபுரம்- டைடல் பார்க் 54R

9. ராமபுரம்- குமணஞ்சாவடி 54R

10. போரூர்-வடபழனி M88

11. போரூர்- குன்றத்தூர் M88

12. பெரம்பூர்-எழும்பூர் 29A