நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படுகிறது. முன்பாக MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்,.25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதம் இத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்த இத்தேர்வு குறித்த தேதி விவரம், இப்போது அதிகாரபூர்வமான இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் மார்ச்-26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை TANCET 2023 தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதி இப்போது வெளியான நிலையில் விண்ணப்ப பதிவுகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. TANCET 2023 தேர்வு தேதி அதிகாரப்பூர்வமான இணையமான tancet.annauniv.edu-ல் வெளியிடப்பட்டு உள்ளது. முன்னதாக TANCET 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகம் கடந்த 25ம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.