நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களுக்கு கடவுள் கிடையாது உடன் பிறந்தார்களே…  தெய்வங்கள் தான். தெய்வமே எப்படி உருவாகிறது ?  ஏன் அவர் தெய்வத்திரு மகன் ? ஏன் காமராஜர் கல்வி கண் திறந்த தெய்வம் ?  ஏன்னா எழுத்து அறிவித்தவன் இறைவன். அவன் எழுத்தறிவித்தான் அதனால் இறைவன், அவ்ளோதான். இப்போ  எங்க தலைவரை எப்படி பார்க்கிறோம் ? இருந்தால் அவன் எங்கள் தலைவன். இறந்தால் அவன் எந்தன் இறைவன். இவ்வளவு தான் எங்க கோட்பாடு.

எங்களுக்கு தெய்வம் எப்படி வருது ? அவர் நல்லவரு…  இது ரொம்ப சாதாரணமா இருக்கு… ரொம்ப நல்லவரு அப்பறம் கொஞ்சம் பரவால்ல…. ரொம்ப சிறந்தவரு…. ஆகச் சிறந்தவரு…. இதெல்லாம் உனக்கு போதல. அப்ப என்ன சொல்றது ? தெய்வமப்பா… அவன் தெய்வம். இப்படித்தான் தமிழர்களுக்கு தெய்வம் உருவாகுது. ஊருக்குள்ள திருட்டு பயலுங்கவருகிறான். ஆடு, மாடுகளை களவு செய்து போகிறான். பொண்ணு –  புள்ளைங்க காதுல –  கழுத்துல இருக்கிற நகைகளை பறித்து கொண்டு போகிறான்.

அப்போ ஊரு எல்லைகளில் காவல் காக்க குடிக்கு ஒருவன் வேல் கம்போடு நிக்கணும்… அருவாளோட நிக்கணும்….  அறிக்கன் விளக்கோடு நிக்கணும்…  தீ பந்தங்களோடு நிக்கணும்….  அந்த காலத்துல அப்படி நிக்கிற போது,  ஊர் எல்லையிலே திருடர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து போரிட்டு எல்லையிலே மாண்டான். அவன் தான் எல்லை காத்த அய்யனார். ஊர் எல்லையில் காலையில் வரும் போது எல்லோரையும் வெட்டி வீழ்த்திவிட்டு,  செத்து கிடந்தான். சனம் முழுக்க கும்பிட்டது. அன்னையிலிருந்து ஊரு எல்லையில் வைத்து கும்பிடுறோம்… இதுதாண்டா குலதெய்வம் வரலாறு… இதுதான் தெய்வத்தின் வரலாறு… இப்படித்தான் வருது என தெரிவித்தார்.