இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையம் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு  முக்கிய பங்காற்றி வருகிறது. 

சென்னை டைட்டில் பார்க்கில் திறன்மிகு மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓராண்டுக்கு முன் நிறுவினார். இம்மையத்தில் நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்கள் உயர்  தொழில்நுட்பங்களின் உதவியுடன் துறை சார்ந்த திறனை வளர்த்து வருகின்றனர். ஏராளமான  மென்பொருள், செயற்கை நுண்ணறிவு,  ஆட்டோமொபைல் உட்பட பல துறைகளை சேர்ந்த 800 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் திறன்மிகு மையத்தின் மூலம் குறைந்த பணத்தில் உயர் தொழில்நுட்பங்களை பெற்று உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன்,

வேலை வாய்ப்புகளையும் பெருக்கியுள்ளனர். மேலும்  கிரானைட்,  மார்பில் கற்கள் மற்றும் காலணி உற்பத்தியில் மென்பொருட்களின் பங்குடன் கால விரயத்தை தவிர்த்து உற்பத்தியை பெருக்கும்  ஆலோசனைகளும்  வழங்கப்பட்டுள்ளன. இது போன்று பல தொழில் நிறுவனங்களும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தியை பெருக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க திறன்மிகு மையத்தை நாடி வருகின்றனர். தொழில்துறை  வளர்ச்சி மாணவர்களின் எதிர்காலம் என தொலைநோக்கு பார்வையோடு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட திறன்மிகு மையம் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.