தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே எந்த மோதலும் இல்லை என இந்திய ஜவுளித்துறை மற்றும் தென்னிந்திய மில்ஸ் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒரு கும்பல் இதுபோன்ற போலியான தகவலை பரப்பி வருகிறது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்ந்தால் 8883920500 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.