தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.