தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 4,01,986 பேர் விண்ணப்பித்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதி இருந்தனர்.

இவர்களில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 5.43 % பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் 95 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வியடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதோடு பட்டதாரி ஆசிரியர்களே தேர்வில் தோல்வியடைந்தது கல்வியின் தரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.