தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி கல்லூரிகளுக்கு விற்பனை செய்யும் நபர்களை தேடி வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சுய விவரங்கள் திருடப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் மோசடி ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.