தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடையில் கதர் பொருட்கள் விற்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், கதர் விற்பனையை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களிடையே எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.