நடப்பு ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 13) துவங்க இருக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விட்டு மாணவர்களின் வசதிக்காக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதோடு மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்ற நோக்கில் சென்ற நவம்பர் மாதமே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் நிலையில், காலை 10:10 மணி வரை மாணவர்கள் வினாத்தாள்களை படிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து 10:10 மணி முதல் 10:15 மணி வரை மாணவர்களின் பதிவு எண், பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன்பிறகு 10:15 மணி முதல் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். பின் மாணவர்கள் பொறுமையாக தேர்வு எழுத மதியம் 1:15 வரை நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பற்றிய அறிவிப்பும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2022-23 ஆம் வருடத்திற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு அட்டவணை

# மார்ச் 13-மொழித்தாள்

# மார்ச் 15-ஆங்கிலம்

# மார்ச் 17-தொடர்பு ஆங்கிலம், பயோ கெமிஸ்ட்ரி, கணினி அறிவியல்

# மார்ச் 21-இயற்பியல், பொருளாதாரம்

# மார்ச் 27 -கணிதவியல், விலங்கியல், நர்சிங்

# மார்ச் 31-உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்

# ஏப்ரல் 3- வேதியியல்,கணக்கு பதிவியல்,புவியியல்