சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. இதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, கண் கண்ணாடி, மகப்பேறு, ஓய்வூதியம் உட்பட பல வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு தீப்பெட்டி தொழிலாளர்கள் தீப்பெட்டி உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை விற்க தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த வகையில் தற்போது வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டவிரோதமான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் 6ஆம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயில வருடந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று தொழிலாளர் இயற்கை மரணமடைந்தால் அவரின் குடும்பத்தாருக்கு ரூபாய்.30,000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். அதன்பின் விபத்து காரணமாக மரணம் அடைந்தால் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.