
தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிறது 30ஆம் தேதி வரை இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதன் பிறகு தமிழகத்தில் நாளை கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி நெல்லை, திருப்பூர், தேனி, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 30-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது