
சென்னை மாவட்டத்திலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதனை அடுத்து மேடையில் முதல்வர் கூறியதாவது, விளையாட்டு வீரர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் விளையாட்டு துறை மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழக விளையாட்டுத்துறை வீரர்களை இந்த உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான ஊக்கத்தொகை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
விளையாட்டுத்துறை மிக நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. துறையும் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. துறை அமைச்சரும் நன்றாக வளர்ந்து இருக்கிறார். தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பதவி ஏற்றதில் விளையாட்டு வீரர்களான உங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அரசு விளையாட்டு துறை வீரர்களுக்கு ரூபாய் மூன்று லட்சமாக ஊக்கத்தொகை அதிகப்படுத்தி உள்ளது. எனது ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறை மிகவும் முக்கியமானதாகும் விளையாட்டு மனவலிமை, உடல் வலிமை தரக்கூடியதாகும். எனவே பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.