செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  ஏடிஎம்கே என்டிஏ-வில் இல்லையென்றால் தனித்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு,  எனக்கு தெரியாது. நான் ஏற்கனவே சொன்னது போல அதற்கான கருத்துக்களை… நம்முடைய தலைவர்கள் சொல்வார்கள். தேசிய தலைவர், NDAவினுடைய ஒருங்கிணைப்பாளர் இதைப்பற்றி சொல்வதற்கு அதிகாரம் இருக்கு. அவங்க பேசுவாங்க. அதனால தான் நான்  கூட்டணிக்குள்ளே  போக விரும்பல. என்னுடைய வேலை பாரதிய ஜனதா கட்சியை பற்றி எந்த கேள்வினாலும் கேளுங்க நான் பதில் சொல்றேன்.

பாஜக வலிமை நிரூபிப்பதற்காக தனித்துப் போட்டியிடுமா ? என்ற கேள்விக்கு, வலிமை நிரூபிப்பதற்காக காரணமில்ல. ஜெயிப்போம். தனித்துப் போட்டியிடுவோம் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை.  ஏனென்றால் ? NDA கூட்டணியில் எத்தனையோ கட்சிகள் இன்னும் இருக்கின்றது. இன்னும் சேருவார்கள். பலம் வலிமையாக இருக்கும். அந்த கூட்டணிக்கான காலமும், நேரமும் வரும்போது சேப் அண்ட் பாம்மை நம்முடைய தலைமை தலைவர்கள் சொல்வார்கள்.

ஜெயிப்பதற்காக தான் போட்டியிடுவோம். நிறைய சீட்டு தமிழ்நாட்டில் ஜெயிப்போம். அதனாலதான் இன்னைக்கு எல்லா கட்சியுமே பயந்து போய் இருக்கிறாங்க. பாரதிய ஜனதா கட்சியின் மீது இவ்வளவு அட்டாக் பண்ணுறாங்க என்றால் என்ன காரணம் ? ஏற்கனவே சொன்னது போல சரித்திரத்தை திரும்பி பார்க்கும் போது தான் ஒரு விஷயம் ஏன் நடந்துச்சுன்னு தெரியும் ? 2024 பாராளுமன்ற தேர்தல் நடந்த பிறகு நமக்கு புரியும்.  எந்த கட்சி அவ்வளவு பலம் வாய்ந்தது என்று என தெரிவித்தார்.