தமிழக அரசு சற்றுமுன் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  அதைத்தொடர்ந்து தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  தொழில்நுட்ப கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி வீரராகவ ராவ் நியமனம். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் சிப்காட் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்வி ஜான் வர்கீஸ் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம். நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சுந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.