கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் தனியாக பயணம் செய்த சௌமியா (23) என்ற இளம்பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2011 ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தமிழக  குற்றவாளி கோவிந்தசாமி.

இவருக்கு கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கோவிந்தசாமி கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளின் படி, வெள்ளிக்கிழமை அதிகாலை அதிகாரிகள் அவரது அறையை ஆய்வு செய்தபோது கோவிந்தசாமி அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.

அதாவது உயர் பாதுகாப்பு இரும்பு கம்பிகளை வெட்டி எடுத்து துணிகளை கயிறு ஆக்கி சுவரில் ஏறி தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவருக்கு வெளியில் இருந்து யாரேனும் உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர்.

தற்போது அவர் தங்கும் இடம் குறித்த  ரகசியத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் சிறையில் இருந்து தப்பியோட கோவிந்தசாமியை கண்ணூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.