இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் பட்டியலில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி 1966 ஆம் ஆண்டு முதல் மார்ச் 24ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் சாதனையை இன்றுடன் முறியடித்துள்ளார்.
முதல் இடத்தில் ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர். அவருக்கு பிறகு இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி இன்றுடன் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
தற்போது பிரதமர் மோடி 2002, 2007, 2012 குஜராத் தேர்தல்களிலும், 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
