தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக மின்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது குறித்து அறிவிப்பில் மார்ச் 20-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நிறைவடையும் வகையில் மின்வாரிய ஊழியர்கள் யாரும் வெளியூர் பயணம் செல்ல கூடாது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி முடியும் வரை மின்வாரியம் சார்ந்த எந்த தகவலை அரசு கோரினாலும் உடனடியாக வழங்க வேண்டும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் மார்ச் 20-ம் தேதி முதல் முடியும் காலம் வரை மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். மேலும் இந்த உத்தரவை மீறி செயல்படும் மின்வாரிய ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.