தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். குறிப்பாக google, போர்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலமாக சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைய இருக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் மொத்தமாக 16 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.7016 கோடி மதிப்புள்ள முதலீடுகள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.