தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக மகளிர் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் உதவித் தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியிலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, ஆனால் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். 3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பணிகளை தொடங்கி விட்டார். 70 தொகுதிகளில் 31 தொகுதிகளுக்கு அவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

மீண்டும் டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.2100 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கான பதிவு நாளையிலிருந்து தொடங்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் தேர்தலுக்குப் பிறகு பெண்களின் வங்கி கணக்குக்கு பணம் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் முன்னதாக ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறியிருந்தேன்.

ஆனால் சில பெண்கள் என்னிடம் வந்து விலைவாசி அதிகரித்து விட்டதால் 1000 ரூபாய் காணவில்லை என்று கூறுகின்றனர். அதனால் தலா ஒரு பெண்களுக்கு 2100 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இன்று முதலமைச்சர் அதிஷி தலைமையிலான கேபினட்டில் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும். மேலும் இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், மாத நிதியில் இருந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இந்த திட்டத்தை பாராட்டுவார்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.