ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகமாக தேடப்படும் டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் கூகுள் நிறுவனம் அதிகமாக தேடப்பட்ட முதல் 10 சுற்றுலா தளங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி என்ற திரைப்படம் அஜர்பைஜான் என்று நாட்டில் எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது ரசிகர்கள் அந்த நாட்டை பற்றி அதிக அளவில் கூகுளில் தேடி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து புதிதாக திருமணமானவர்கள் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலா தளமான பாலி இடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து மணாலி, ஜெய்பூர், அயோத்தி, காஷ்மீர், தெற்கு கோவா உள்ளிட்ட 5 சுற்றுலா தளங்களும் இடம்பெற்றுள்ளது. அதோடு கஜகஸ்தான், ஜார்ஜியா, மலேசியா உள்ளிட்ட 3 வெளிநாட்டு சுற்றுலா தலங்களும் இடம்பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தளங்களின் டாப் டென் லிஸ்ட்:

1 அஜர்பைஜான்

2 பாலி

3 மணாலி

4 கஜகஸ்தான்

5 ஜெய்ப்பூர்

6 ஜார்ஜியா

7 மலேசியா

8 அயோத்தி

9 காஷ்மீர்

10 தெற்கு கோவா