திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, நமக்கு கடந்த கால வரலாறே சொல்லும். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இதெல்லாம் புதிதாக இருக்கும். இப்பொது யார்யாரோ போசுகிறார்கள்…   மோடி பேசுகிறார்… அமித் ஷா  பேசுகிறார். ஒரு காலத்துல அண்ணாமலை பாஜகவில்  தலைவர் ஆனபோது,  ஒரு பேட்டியில் சொன்னார். கும்மிடிபூண்டியை தாண்டினால் மு.க ஸ்டாலினை  யாருக்கு தெரியும் என்று சொன்னார்.

அந்த அண்ணாமலைக்கு இன்றைக்கு அமித் ஷாவும், மோடியும்  பதில் சொல்லிவிட்டார்கள். இந்தியாவே ஸ்டாலினை பற்றியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கின்றது என்ற நிலைக்கு நம்முடைய இயக்கம் வளர்ந்திருக்கின்றது. இதே போல தான் 1971-ஆம் ஆண்டு தேர்தல். திடீரென்று தேர்தல் வந்தது.

காரணம் இந்திரா காந்தி அம்மையாரை வீழ்த்துவதற்காக….  அன்றைக்கு மன்னர் மாநிலத்தை ஒழித்ததால்…  பங்குகளை தேசிய மயமாக்கியதால்… எப்படி இன்றைக்கு மோடிக்கு பின்னாலே…  அதானியும்,  அம்பானியும் இருக்கிறார்களோ…  அதே போல அன்றைக்கு பேங்க் முதலாளிகளும்,

முன்னாள் மன்னர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு…  இந்திராவினுடைய ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்து….  அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு, உடனடியா இந்திரா காந்தி அம்மையார் துணிச்சலோடு பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு,  பாராளுமன்றத்திற்கு தேர்தலை அறிவித்தார்.

அன்றைக்கு தமிழகத்தினுடைய முதலமைச்சராக தலைவர் கலைஞர் அவர்கள்,  திராவிட முன்னேற்ற கழகம் 67 வெற்றி பெற்று,  72 வரை ஆட்சி காலம் இருக்கின்றது. இருந்தாலும் ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் ?  அதிமுகவில் இருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அரவேக்காடுகள்…  அரசியலுக்கே அப்போது வராதவர்கள்,  பாராளுமன்றத்திற்கும் ,  சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் ? ஸ்டாலின் பயப்படுகிறார் என சொல்கிறார்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன். ஏற்கனவே  பத்திரிகையாளர்கள் கேட்டபோது நான் சொன்னேன். 1971இல் ஜெயக்குமார் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். காரணம் அவருடைய அப்பாவிற்கு இதெல்லாம் தெரியும். அவங்க அப்பா திமுகவில் கவுன்சிலராக இருந்தார். 1971 தேர்தலில் திமுகவுக்காக அவர் வேலை செய்தவர். செத்துப்போன உங்க அப்பாகிட்ட கேட்டா சொலவர்  என்று நான் பேட்டியிலே சொன்னேன்.  சன் டிவில எல்லாம் போட்டாங்க என தெரிவித்தார்.