செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி  பல தடவை சொல்லிட்டேன்.  அது அவசியமற்றது. தேவையற்றது. சுத்த பைத்தியக்காரத்தனம்.  இப்படி மூக்க தொடாம.. இப்படி சுத்தி தொடரது. ஐயா. கருணாநிதி அவர்கள்  பல ஆண்டுக்கு முன்னாடியே இதை  வலியுறுத்தி  பெருமையெல்லாம் பேசி இருக்காங்க.ஒரே நாடு ஒரே தேர்தல்ல..  அதனால செலவு மிச்சம் ஆகுமாம். இவர்கள் தான் திராவிட நாடு கேட்ட திருவாளர்கள்.

மாநில தன்னாட்சி பேசிய பெருமக்கள் இவர்கள் தான். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நடந்திரும்னு நான் உங்களை கேட்குறேன்…. நீங்க மோடியா நினைச்சுக்கோங்க…. இல்ல அமித்ஷாவா நினைச்சுக்கோங்க… இல்ல இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர்…  நான் உங்ககிட்ட கேட்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ன நடக்கும் ?  இப்ப நான் ஒன்னு கேக்குறேன்..

ஒரே நாடு,  ஒரே தேர்தல்… ஐயா வாஜ்பாய் அரசு கவிழ்ந்துச்சா ?  இல்லையா ? கவிழ்ந்துச்சு…  அப்ப ஆட்சி கலைஞ்சிடுச்சு. இப்ப வெறும் பாராளுமன்றத்திற்கு மட்டும் தேர்தலா ? ஒட்டுமொத்த மாநிலத்தையும் கலைஞ்சுட்டு, மறுபடியும் சட்டமன்றத் தேர்தலா ? இது தண்டச் செலவு… வெட்டி செலவா ? இல்லையா ?

இப்ப ஒரு உறுப்பினர் இறந்து விடுகிறார்…  பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர். அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தலா ? இல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கும் தேர்தலா ? இப்போ ஒரு மாநில ஆட்சி கலையிது…   வச்சிக்கிடுவோம். இப்ப காங்கிரசுக்கு குமாரசாமி ஆதரவு கொடுத்து,  ஒரு ஆட்சி போகுது. அல்லது பாரதிய ஜனதாவுக்கு ஒரு ஆட்சி போகுதுன்னு வச்சுக்கோங்க… அதெல்லாம் பிடிக்கல வித்ட்ரா பண்றாரு,  திரும்ப பெறுகிறார்.

அந்த மாநிலத்துல ஆட்சி கலையுது. அந்த குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் மறு தேர்தலா ? இல்ல ஒட்டுமொத்தமா ? சட்டமன்றத்தையும்,  பாராளுமன்றத்தையும் கலச்சி தேர்தலா ? இதுக்கு பேரு தான்  குரங்கு கையில பூமாலை என்பார்களே… அது மாதிரி தான். பூவின் அருமையும் தெரியாது. அது என்னன்னு தெரியாது. பிச்சு பிச்சு போடும். அப்படி அவங்க கையில தேசத்தை கொடுத்துட்டு நம்ம முழிச்சிட்டு நிக்கணும். இதனால் என்ன செலவு மிச்சம் ஆகும் ? என தெரிவித்தார்.