லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு சிறுநீர் கழிப்பு எதிர்ப்பு பெயின்ட் anti-pee-paint என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு உள்ளனர்.
இந்த பெயின்டிலுள்ள ரசாயனக் கலவை குறிப்பிட்ட சுவற்றில் வர்ணம் பூசியதும் பல அடுக்குகளாக ஒன்றிணைந்து சுவற்றின் மேற்பரப்புக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்த பெயின்ட் பூசிய சுவற்றில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, கழிப்பவர் மீது மீண்டும் சிறுநீர் அடிக்கும் என சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக லண்டனின் சோஹோ பகுதியில் உள்ள பொதுச் சுவர்களில் இந்த பெயின்ட் பூசப்பட்டு உள்ளது. அதன்பின் பொதுசுகாதாரம் மோசமான இடங்களில் பெயின்ட் பூசயிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.