நாடு முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், குளிர்காலத்தில் குளிப்பதில் உள்ள சிரமத்தையும் அதற்காக மக்கள் கையாளும் வினோத முறைகளையும் விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பனிப்பொழிவு மற்றும் சில்லென்ற காற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கப் பலர் பல்வேறு யோசனைகளைச் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், நபர் ஒருவர் குளிக்கும் தண்ணீரைச் சூடாக்கத் தண்ணீர் குழாய்க்கு அடியில் வரிசையாக மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து நூதன முயற்சியில் ஈடுபடுகிறார். மெழுகுவர்த்திச் சுடர் படுவதால் குழாயின் வழியாக வரும் தண்ணீர் சூடாகும் என அவர் நம்பினாலும், இணையவாசிகள் பலர் இந்த முறை சாத்தியமில்லை எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோ, குளிர்காலச் சிரமங்களை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதாக அமைந்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
