சமூக வலைதளங்களில் சில சமயங்களில் வெளிப்படும் ஆக்கபூர்வமான திறமைகள் மக்களின் இதயங்களை எளிதில் வென்று விடுகின்றன. அந்த வகையில், விலையுயர்ந்த ஒலிவாங்கிகள் அல்லது நவீன ஸ்டுடியோ வசதிகள் ஏதுமின்றி, ஒரு சாதாரண போர்வெல் இரும்புக்குழாயை ஒலிவாங்கியாகப் பயன்படுத்தி இளைஞர் ஒருவர் பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pipe Singer (@pipe_singer)

பார்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற தேசபக்தி பாடலான சந்தேசே ஆத்தே ஹே என்ற பாடலை, அந்த இரும்புக்குழாயின் எதிரொலியைத் துணையாகக் கொண்டு அவர் பாடும் விதம் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. பைப் சிங்கர் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன், லட்சக்கணக்கானோர் அவரது குரல் வளத்தைப் பாராட்டி வருகின்றனர்.

எந்தவித ஆடம்பரமும் இன்றி உண்மையான திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோ, தற்போதைய இணைய உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது.