தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இப்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தை அடுத்து தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்த படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். லால் சலாம் படத்தை முடித்த பிறகு லைக்கா தயாரிப்பில் உருவாகும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் ரஜினியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். இந்நிலையில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் விஜய் நடித்துள்ளார். அதாவது, விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1985ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தாம் நான் சிகப்பு மனிதன். அந்த படத்தில் இடம்பெறும் தொடக்க காட்சி ஒன்றில் விஜய் நடித்திருப்பார். இக்காட்சியில் விஜய் தோன்றியதை பலரும் கவனித்திருக்க முடியாது. தற்போது அந்த காட்சியை ரசிகர்கள் சமுகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.