
தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் ஆன திமுக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் இருந்து பல்வேறு விதமான பெண்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000, பேருந்துகளில் இலவச பயணம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருமணத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்த உள்ளது.
அதன்படி தமிழக அரசின் சமூக நலத்துறை 8 கிராம் தங்கம் வழங்குவதற்காக 8000 தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரி உள்ளது. அதன்படி சுமார் 16 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசின் சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 4 வகையான திருமண உதவி திட்டங்களில் சுமார் 48.83 கோடி செலவில் 8,000 தங்க நாணயங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு கோரி உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.