
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணா அவென்யூ பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டவ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராஜ்குமாரின் தாய் மற்றும் சகோதரிகள் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காதல் தோல்வியால் ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.