தேனி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜமோகன் முன்னிலையில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். மேலும் பெரியகுளம் கோர்ட்டில் சார்பு நீதிபதி மாரியப்பன், ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு சர்மிளா மற்றும் உத்தமபாளையம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், மாஜிஸ்திரேட்டுகள் ரமேஷ், ராமநாதன் ஆகியோர் முன்னிலையில்  தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்நிலையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்கள் தொடர்பான வழக்குகள் பற்றி விசாரணை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மொத்தமாக 2 ஆயிரத்து 10 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்தது. மேலும் நிலுவை வழக்குகளில் ரூ.4 கோடியே 14 லட்சத்து 5 ஆயிரத்து 420 மதிப்பில் தீர்வுகள் இந்த நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.