அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவேரியார் பட்டி வடக்கு தெருவில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணி(40) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கிளோரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக அந்தோணி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் ஆரோக்கியசாமி பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் அந்தோணி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.