பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் ஆரா மாவட்டத்தில் இன்று ரோடு ஷோ நடைபெற்றது.
அதில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அப்போது அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
