ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசான திமுக வாரிசுகளின் கட்சிதான்.  ஆரியத்தை வீழ்த்த வந்த பெரியார் – அண்ணா – கலைஞரின் வாரிசுகள் நாங்கள். வெறுப்பு அரசியல் மூலம் ஆதாயம் தேட நினைத்தால் மணிப்பூரில் வன்முறை நிலவுகிறது. மணிப்பூர் கொடுமையை பற்றி அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தாரா ? எடப்பாடி பழனிச்சாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பதை பற்றி பேசுகிறார் பிரதமர் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.