
ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி நீண்ட நேரம் வெளியே வராததை அறிந்த சகமாணவிகள் உள்ளே சென்று பார்த்த போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நேபாளத்தின் தூதகரத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தொழில்நுட்ப மையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் 3 மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் 21 வயது மாணவர்களால் தற்கொலைக்கு தூண்டப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அர்னாப் என்ற மாணவர் மன்சேஸ்வர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும் தற்போது மற்றொரு மாணவியின் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.