பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு, மூத்த பெண் அரசியல்வாதியாக இருந்த டினா பொலுவார்டே, அதிபராக பொறுப்பேற்றார். எனினும் பெட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்யுமாறும் தற்போதைய அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் நாடு முழுக்க தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது இந்த போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. இதில் 47 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக மூன்று நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.