அனைத்து நாடுகளும் கொரோனா தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா நோயாளிகள் சேர்க்கை மற்றும் இறப்புகள் பற்றிய விரிவான மற்றும் நம்பகமான தரவுகளை தருமாறு சீனாவிடம் தொடர்ந்து கேட்டு வருவதாக கூறினார்.
கடந்த வாரம் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 500 கொரோனா இறப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் ஆனால் அது நிச்சயமாக குறைத்து கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார். நோய் பரவலை தடுக்கும் பயனுள்ள போராட்டத்திற்கு அனைத்து நாடுகளின் பங்களிப்பும் தேவை என கேட்டுக் கொண்டார்.