
சென்னையில் செனாய் நகர் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் மக்களை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தெரு நாய்களை வெளியில் இருந்து யாரோ வந்து அப்பகுதியில் விட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இது பற்றி புகார் கொடுத்திருந்தனர்.
அந்த புகாரின் படி மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் காணப்பட்ட தெருநாய்களை பிடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் மக்களை விரட்டி விரட்டி கடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.