செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில்.. 520 அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறார். அதில் 100% நிறைவேற்றப்பட்டதா சொல்லுகிறார்கள்..  எங்கங்க 100% நிறைவேற்றி இருக்காங்க… எல்லாம் பச்சை பொய். கூட்டுறவு நியாய விலை ரேஷன் கடையில் சர்க்கரை 2 கிலோ கொடுப்பேன்னு  சொன்னார்கள்,  கொடுத்தார்களா ?

முதியோர்வுகளுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார்கள்,  கொடுக்கவில்லை. 100 நாளை வேலை திட்டத்தில் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார்கள்,  உயர்த்தவில்லை.  100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிகின்ற பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி படும் என சொன்னார்கள்,  வழங்கவில்லை.

இளைஞர்கள் வங்கியில் வாங்கிய கல்வி கடன் ரத்து என்று சொன்னார்கள்.. பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்று சொன்னார்கள். பெட்ரோலுக்கு  மட்டும்  இரண்டு ரூபாய் குறைத்துவிட்டு,  அப்படியே விட்டுவிட்டார்கள். டீசலுக்கு குறைக்கவில்லை. இன்னைக்கு அண்டை  மாநிலம் 8 ரூபாய் டீசல் விலை குறைவு.

அங்கு போகின்ற லாரியெல்லாம்…  வாகனங்கள் எல்லாம் அங்கேயே டேங்கில்  நிரப்பிட்டு வந்துடுறாங்க. அதனால் நமக்கு வருகின்ற வருவாய்… டேக்ஸ் நாம் இழக்கின்றோம். இந்த விடியா திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு மின்கட்டணம் கடுமையாக உயர்ந்து கொண்டு விட்டது. 12 சதவீதத்திலிருந்து 52% உயர்ந்துவிட்டது.  வீட்டு வரி 100 சதவீதம் உயர்ந்து விட்டது.

கடை வரி 150% உயர்ந்துவிட்டது, குடிநீர் வரி உயர்ந்துவிட்டது. குப்பை வரி போட்டு விட்டார்கள். வழிகாட்டு மதிப்பு….  நிலத்தினுடைய வழிகாட்டு மதிப்பு உயர்த்தி விட்டார்கள். கலால் வரி உயர்ந்துட்டு, 1 பாட்டிலுக்கு 30 வரை உயர்த்திவிட்டார்கள். இந்த வரியெல்லாம் உயர்த்தி  கூட இன்றைக்கு பற்றாக்குறையாக தான் இருக்கிறது.

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலத்தில் இரண்டு லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். என்ன புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் ?எதுவுமே கிடையாது…  இன்றைக்கு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். மகளிருக்கு கட்டணம் இல்லா நகரப் பேருந்து வசதி செய்து கொடுக்கிறோம் என்று….  அதில் 30 சதவீத நகர பேருந்துகளில் தான் மகளிர் ஏறினாள் கட்டணம் இல்லாமல் போகலாம்.   பிங்க் கலர்….  பேருந்து முகத்தில் முன் பகுதியில்  பிங்க் கலர்  அடிச்சி இருக்கும்.

அந்த பேருந்தில் ஏறினால் தான் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். மற்ற பேருந்துகள் எல்லாம் கட்டணத்தோடு தான் செல்ல வேண்டும். ஆனால் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லி இருக்கிறார்கள் ? மகளிர் தமிழ்நாடு முழுவதும் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு….

இப்பொழுது குறிப்பிட்ட பேருந்துகளில்….  அந்த பிங்க் கலர் அடித்த அந்த பேருந்தில் தான் கட்டணம் இல்லை என்று சொல்கிறார், இதுதான் நிலைமை. அதோடு தேர்தல் நேரத்தில் மூளைக்கு மூளை பேசினார்கள்…. திரு ஸ்டானிலும் பேசினார்,  திரு உதயநிதி ஸ்டாலினும் பேசினார்….

திராவிட  முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து உடனே அனைத்து குடும்ப தலைவிகளுக்கும்  மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை சொன்னார்கள். சொன்னார்களா இல்லையா ? பத்திரிகையாளர்கள் சொல்ல மாட்டேங்குறீங்க ?  நீங்க தெளிவா போடணும் என தெரிவித்தார்.