அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, கட்சியை வைத்து பிழைப்பு நடத்துற குடும்பம் இல்லடா… புரட்சி தலைவர் வழியில்  உழைத்து,  ரத்தத்தை வேர்வையாக சிந்தி,  சம்பாதித்த பணத்தில் 25 சதவீதம் செலவு பண்ணி,  கூட்டம் நடத்துறாரே…  இந்த வீர மறவன்  இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவனாலும் ஆட்டி,  அசைக்க முடியுமா ? முடியவே முடியாது.

கருணாநிதி மகன் ஸ்டாலின் இல்லை….  உதயநிதி இல்ல… இன்ப நிதி இல்லை…. உங்கப்பனாலே  முடியல…. பாடல் எழுத… கவிதை எழுத.. கதை எழுத… நாடகம் எழுத… பேச்சாற்றல் மிக்க….  கலைஞராலையே முடியலையே… நீங்க எல்லாம் எம்மாத்திரம். உங்களால இந்த கட்சி அழிஞ்சிடும். அதுக்கு தான் நாம் ஆறுபடை வீடு கொண்ட நம்முடைய முருகன். ஒரு முகம்… இருமுகம் அல்ல… ஆறுமுகத்தினை கொண்ட நம்முடைய பழனிச்சாமி. இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கழக பொதுச் செயலாளராக  தலைமை ஏற்றிருக்கிறார்.

இது தலைவருடைய கட்சியப்பா…  ஏதோ சாதாரணமா நினைக்கிறாங்க…  இந்த கட்சியே வித்தியாசமான கட்சி. அழிஞ்சு போச்சு என்று  நினைக்குறாங்க. அவ்வளவு தான்ப்பா  இந்த கட்சியின் முடிவு. ஆனால் தொண்டனுக்கு தெரியும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பியவர்கள் கேட்டதில்லை, நம்பாமல் கெட்டவன் தான் இந்த உலகத்தில் அதிகம். அந்த மாதிரி பல இருக்கு  தெரிவித்தார்.