அரசு  பணியாளர் தேர்வாணையம், அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு தற்போது மகிழ்ச்சியுண செய்தியை வழங்கியுள்ளது. அதாவது 11,409 காலிப்பணியிடங்களுக்கு (எம்டிஎஸ்-10,880, ஹவால்தார்-529) விண்ணப்பிக்கும் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இதற்கான காலக்கெடு இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26 வரை கட்டணம் செலுத்தலாம். மார்ச் 2 மற்றும் 3ம் தேதிகளில் விண்ணப்பங்களில் மாற்றம் செய்யலாம்.

இதற்கு 10 அல்லது அதற்கு சமமான கல்வி பெற்றிருக்க வேண்டும். கணினித் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஹவால்தார் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக உடல் திறன் தேர்வு இருக்கும். விவரங்களுக்கு, ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.