மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது.  இதேபோல், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் வெறும் 4% ஆண்டு வட்டியில் விவசாயக் கடன்களைப் பெறுகிறார்கள். இத்திட்டத்தின் மூலமாக 3 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டம் விவசாயிகளின் இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.50,000 வரை காப்பீடு வழங்குகிறது.