எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை அரசு இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே வழிக்கு என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பு இலங்கை அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதாவது இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையில் சட்டத்திற்கு புறம்பாக மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் கடல் வளங்கள் அழிவதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணத்தின் போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.