பிரான்ஸ் நாட்டில் உள்ள நாண்டர் புறநகர் பகுதியில் 17 வயது சிறுவன் நீல் என்பவரை போலீசார் கீழ்ப்படியவில்லை என்ற காரணத்திற்காக சுட்டு கொலை செய்தனர். இது பற்றி அறிந்த மக்கள் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு கண்டனம் தெரிவித்து வந்தனர். நேரமாக ஆக ஆக போராட்டம்  வன்முறையாக மாறி காவல் நிலையங்கள் பள்ளிகள் போன்றவை தீ வைக்கப்பட்டதோடு 170 காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். இதை அடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 180 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததோடு 40,000 காவல்துறையினரை வன்முறையை கட்டுப்படுத்தும் பொருட்டு பாரீசில் குவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மெக்ரான் வன்முறை கலவரம் போராட்டம் என எதைப் பற்றியும் கவலை இல்லாமல் அவரது மனைவியுடன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி கொண்டாடிக் கொண்டிருந்துள்ளார். ஒருபுறம் பிரான்ஸ் கலவர பூமியாக  இருக்க மறுபுறம் அதிபர் மெக்ரான் தனது மனைவியுடன் நடனமாடிமகிழ்ந்து  கொண்டிருப்பதற்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.