இலங்கை நாடு கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை உலக நாடுகளிடமிருந்து கடன் பெற்றது. அவ்வாறு பெறப்பட்டது கடனின் மொத்த மதிப்பு ரூபாய் 4.19 லட்சம் கோடி ஆகும். இதில் இந்தியாவிடம் இருந்து மட்டும் ரூபாய் 36 ஆயிரம் கோடி அவசரகால கடன் உதவி இலங்கை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து சர்வதேச நாணய நிதியிடம் இருந்து மட்டும் இலங்கைக்கு ரூபாய் 23,829 கோடி அவசரக்கால கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாடு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்கு தேவையான கடன் மறு சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளுக்கு இலங்கை சீனாவிடம் இருந்து பெற்ற கடனை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க சீனா தயாராக உள்ளது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.