இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம்,  அதில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள்  குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில்  பங்கேற்று  முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பிரதமர் மட்டுமல்லாமல் மக்களவையிலே லீடர் ஆப்த ஹவுஸ் என்ற பொறுப்பிலும் பிரதமர் மோடி இருக்கிறார். ஆகவே  அவர் முதல் பேச்சாளராக பேச வேண்டும் என்பது ஆளும் கூட்டணியின் விருப்பம். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார். அதேபோலவே மாநிலங்களவையிலே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த விவாதத்தை தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளிலுமே நாடாளுமன்றத்தின் 75 வருட பயணம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி இந்த கூட்டத்தொடர் நடந்தாலும் சிறப்பு கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். நாட்டின் உற்சாகமான சூழல் நிலவுகிறது என தெரிவித்திருந்தார்.

அதே போல இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்களும் மல்லிகார்ஜுன கார்க்கே  தலைமையில் நடந்த ஆலோசனையில்  மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடக்கி உள்ளது.