பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது. இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தின் இன்றைய அமர்வு மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு பிரதமர் மோடிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்தார்.

அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசத்தின் வளர்ச்சிப் பணியில் நாட்டு மக்கள் தொடர்ந்து வியர்வை சிந்தி வருகின்றனர்; புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றாலும், இந்த கட்டடமும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும்”  இந்த வரலாற்று கட்டிடத்திற்கு நாம் அனைவரும் விடைகொடுக்கின்றோம். சுதந்திரத்திற்கு முன், இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கான இடமாக இந்த மாளிகை இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது பாராளுமன்ற கட்டிடம் என்ற அடையாளத்தைப் பெற்றது.

இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். இன்று, அனைத்து இந்தியர்களின் சாதனைகள் எங்கும் விவாதிக்கப்படுகின்றன. இது நமது 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் நாம் ஒன்றிணைந்த முயற்சியின் பலன். சந்திரயான்-3 வெற்றியை மட்டும் செய்யவில்லை.

இந்தியாவே உலகமே பெருமை கொள்கிறது. இது தொழில்நுட்பம், அறிவியல், நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் வலிமை ஆகியவற்றுடன் இணைந்த இந்தியாவின் வலிமையின் புதிய வடிவத்தை எடுத்துக்காட்டுகிறது. இன்று, நான் மீண்டும் நமது விஞ்ஞானிகளை வாழ்த்த விரும்புகிறேன்.

இன்று, ஜி20யின் வெற்றியை நீங்கள் ஒருமனதாகப் பாராட்டியுள்ளீர்கள்.. எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20யின் வெற்றி, நாட்டின் 140 கோடி குடிமக்களின் வெற்றியாகும். இது இந்தியாவின் வெற்றி. அது ஒரு தனி நபர் அல்லது ஒரு கட்சி மட்டுமல்ல நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம் என தெரிவித்தார்.