தமிழகத்தில் இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று பொது விடுமுறையை மீறி சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக தற்போது தனியார் பள்ளி இயக்குனர் பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று விடுமுறை அறிவிப்பை மீறி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‌ சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இதன் காரணமாக தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.